Posts

Showing posts from October, 2018

நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்

Image
நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்  1. நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்: ****************************** ***************** வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும் வளரக்கூடியது. சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாக தேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில்அதிக லாபம் தரும் தொழில். அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யும் தொழில். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில். கிராமப்புற பெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பு. நாட்டுக் கோழிகளின் அடை காக்கும் தன்மை. குஞ்சுகளை பாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு எச்சம். 2. நாட்டுக்கோழி இனங்கள்: *************************** நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.      1.குருவுக்கோழி,      2.பெருவிடைக்கோழி,      3.சண்டைக்கோழி அசில்கோழி,      4.கடக்நாத் என்னும் கருங்கால் கோழி, ...