நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்

நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள் 


1.நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:
***********************************************

வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும் வளரக்கூடியது. சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாக தேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில்அதிக லாபம் தரும் தொழில். அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யும் தொழில். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில். கிராமப்புற பெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பு. நாட்டுக் கோழிகளின் அடை காக்கும் தன்மை. குஞ்சுகளை பாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு எச்சம்.


2.நாட்டுக்கோழி இனங்கள்:
***************************
நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.

     1.குருவுக்கோழி,
     2.பெருவிடைக்கோழி,
     3.சண்டைக்கோழி அசில்கோழி,
     4.கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,
     5.கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,
     6.கொண்டைக்கோழி,
     7.குட்டைக்கால் கோழி.




3.நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்:
***********************************
1.மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு :
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம். போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், தண்ணீர் கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
2.மித தீவிர முறை :
கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம். கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.
3.தீவிர முறை :
கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
4.கூண்டு முறை :
கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.
7."மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி ":
ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்.



STAR CHICKEN
Sri Sai City Plot No 1 First Street, WalajabadThammanur, Tamil Nadu 631605
contact us : 9952442425, 7904138958.



Comments

Popular posts from this blog